நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடித்து வரும் படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த வாரத்திலிருந்து ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனம் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர் 'குட் பேட் அக்லி' பின்னணி இசைக்காகக் காத்திருக்க முடியவில்லை,” என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு ஜிவி பிரகாஷ் 'பயர்' எமோஜியைப் பதிலாகப் போட்டிருந்தார். அதற்கடுத்து கமெண்ட்டாக, “எனது வாழ்க்கையில் சிறந்த ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் 'குட் பேட் அக்லி' படத்தையும் தயாரித்து வருகிறது. 'புஷ்பா 2' பின்னணி இசை குறித்து சர்ச்சை எழுந்து அது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்தும் மேடையில் தயாரிப்பாளர் ரவியைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். ஹைதராபாத்தில் நடந்த 'ராபின்ஹுட்' படத்தின் பட பத்திரிகையாளர் சந்திப்பிலும் தயாரிப்பாளர் ரவி சங்கர், “தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் வரை அவர் எங்களது படத்திலும், நாங்கள் படம் தயாரிக்கும் வரை தேவி ஸ்ரீ எங்களுக்கு இசையமைப்பார்,” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் அவர்கள் தயாரிக்கும் 'குட் பேட் அக்லி' படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத்திற்குப் பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.