9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

மலையாள நடிகராக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இப்போதும் அனைத்து மொழிகளிலும் பிஸியான குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ஒரு பக்க கதை என்கிற படம் மூலமாக தான் அறிமுகமானார். அந்த படம் தாமதம் ஆனாலும் அடுத்த சில வருடங்களில் விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது, பாவக்கதைகள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமானார். கடந்த மே மாதம் காளிதாஸின் சகோதரி மாளவிகாவுக்கு பாலக்காட்டைச் சேர்ந்த நவநீத் கிரிஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமின் திருமணமும் தற்போது வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற இருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாகவே காளிதாஸ் மாடல் அழகியான தாரணி காளிங்கராயர் என்கிற பெண்ணை காதலித்து வந்தார். தனது குடும்பத்தினரிடமும் அவரை ஏற்கனவே அறிமுகப்படுத்தி அவர்களின் சம்மதத்தையும் பெற்றுவிட்டார். இந்த நிலையில் மகளின் திருமணத்தை முடித்த கையோடு ஆறு மாதத்திலேயே மகனின் திருமணத்தையும் முடித்து விடும் முயற்சியில் திருமண வேலைகளை பார்த்து வந்தார் நடிகர் ஜெயராம். அந்தவகையில் தற்போது திருமண பத்திரிக்கை வைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஜெயராம் குடும்பத்துடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.