டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜெயிலர்' படம் வெளியான பல இடங்களில் வசூலில் புதிய சாதனையைப் படைத்து வருகிறது. படம் வெளியான கடந்த 12 நாட்களில் ரூ.520 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களில் இப்படம் குறிப்பிடத்தக்க வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ரூ.70 கோடி, கர்நாடகாவில் ரூ.60 கோடி வசூலையும் கடந்துள்ள இந்தப் படம் கேரளாவில் ரூ.47 கோடி வசூலைக் கடந்து ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்த மாநிலங்களில் ஒரு தமிழ்ப் படத்திற்குக் கிடைத்துள்ள அதிகப்படியான வசூல் இது.
ஒட்டுமொத்தமாக தென்னிந்திய மாநிலங்களில் இப்படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடித்ததற்கே இந்த வசூல் என்றால் அவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் அங்கெல்லாம் கூட ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.




