நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் . அரசியல் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறாராம் ராம் சரண். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படம் முதலில் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் சூழல் இருந்தது. ஆனால், ஒரே சமயத்தில் ஷங்கர் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்கள் படப்பிடிப்பை நடத்தி வருவதால் தாமதம் ஆகிறது. இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தை ஆகஸ்ட் 15, 2024ம் அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.