ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு கதாநாயகனாக நடிக்கும் அவரது 48வது படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. மிகவும் வைரலான அந்த செய்தி ஏஆர் ரஹ்மானுக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அப்படிப்பட்ட செய்தி ஒன்றைப் பகிர்ந்து ஏஆர் ரஹ்மான், “????????” எழுப்பியுள்ளார். சிலம்பரசனின் சில படங்களுக்கு ஏஆர் ரஹ்மான் இதற்கு முன்பு இசையமைத்து அப்படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
சிம்பு 48 படத்திற்கு யார் இசை என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே இப்படி ஒரு தகவல் பரவி அது செய்தியாகவும் வந்து அதற்கு ரஹ்மான் கமெண்ட் அடித்திருப்பதை ரசிகர்கள் பலரும் பதிலுக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
யாரோ ஒரு சிம்பு ரசிகர் பார்த்த வேலையாக இருக்குமோ ?.