ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலையொட்டி வெளியானது. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம், ஒட்டு மொத்தமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக கேரளாவில் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ராய் அகஸ்டின் என்பவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்துக்கு தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் தொகையை திரும்ப பெற்றுத் தருமாறு, நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார். இதுமட்டுமல்லாது, தான் கொடுத்த பணத்துக்கு ஜிஎஸ்டி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.