டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் சுமார் 90 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படம் வெளியான மூன்றாவது நாளான நேற்று கூட சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலை நெருங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 3.25 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 27 கோடி. இன்று ஞாயிறுக்குள் அதன் வசூல் 4 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 33 கோடி வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளியான படங்களில் 200 கோடி வசூலைக் கடக்கும் 6வது படம் இது. இதற்கு முன்பு நடிகர் விஜய் மட்டுமே 200 கோடி வசூலைப் பெற்ற 6 படங்களைத் தன் வசம் வைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ரஜினிகாந்த் சமன் செய்துள்ளார்.




