தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
இதயத்தைத் திருடாதே, தென்றல் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் நிலானி. காதலும் கடந்து போகும், நெருப்புடா, ஓம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். போலீஸ் சீருடையில் போலீசுக்கு எதிராக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில தன்னிடம் சிலர் நூதன முறையில் மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது : கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் என்னிடம் பேசினார். குறைந்த வட்டிக்கு கார் லோன் தருவதாக சொன்னார். அதை ஆன்லைன் மூலமாக பெறலாம் என்றும் சொன்னார். இதில் வட்டி மற்றும் பிற விவரங்களை கேட்டபோது அந்த நிதி நிறுவன ஊழியர் முதலில் ஆன்லைனில் லாக் இன் பண்ணினால் தான் தெரியும் என கூறினார். அதனால் நான் ஆன் லைனில் லாக் செய்தேன். வட்டி தொகை அதிகமாக இருந்ததால் கடன் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு மெசேஜ் வந்தது. உங்களது லோன் 8.80 லட்சம் கிரெடிட் ஆகி விட்டது, அதற்கான வட்டி தொகை 10,998 ரூபாய் கட்டுங்கள் என்று அந்த மெசேஜ் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நிதி நிறுவன மேலாளரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் மிரட்டினார். எனது வங்கி கணக்கில் இருந்து 10,998 ரூபாய் எடுத்துள்ளனர். கார் லோன் வாங்காமலேயே இது போன்ற நூதன மோசடியை நிதி நிறுவனம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.