‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் முதல் சிங்கிளாக வெளிவந்த பாடல் 'காவாலா'. நடிகை தமன்னாவின் அட்டகாசமான கிளாமர் நடனத்தால் அந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது. அதில் ஓரிரு வினாடிகள் மட்டுமே வந்து போனார் ரஜினிகாந்த்.
பொதுவாக ரஜினிகாந்த் படம் என்றால் அவர் முழுமையாக இடம் பெறும் பாடல்தான் முதல் சிங்கிளாக வெளியாகும். ஆனால், 'ஜெயிலர்' படத்திற்கு அப்படி நடக்கவில்லை. அதனால், 'காவாலா' பாடல் வெளியான போது 'ரஜினி எங்கப்பா' என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு அப்பாடல் இருந்தது. இப்போது அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டுள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'ஜெயிலர்' படத்தின் டிரைலர் வெளியானது. அதில் எந்த ஒரு இடத்திலும் தமன்னா காட்டப்படவேயில்லை. 'காவாலா' பாடலின் ஒரு வரியும் கூட காணவில்லை. அதே சமயம், 'ஹுக்கும்' பாடல் வரிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், ரசிகர்கள் தற்போது 'தமன்னா எங்கப்பா' என மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். அது மட்டுமல்ல மலையாள சினிமா ரசிகர்கள் 'மோகன்லால் எங்கப்பா' எனவும், கன்னட சினிமா ரசிகர்கள் 'சிவராஜ்குமார் எங்கப்பா' எனவும் கேட்டு வருகிறார்கள். அந்தக் கதாபாத்திரங்கள் சஸ்பென்ஸ் ஆனவை என்பதால்தான் டிரைலரில் இல்லை என்றும் சொல்கிறார்கள்.




