ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா |
பிரபல பாலிவுட் கலை இயக்குனரான நிதின் சந்திரகாந்த் தேசாய்(58) தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார் நிதின் சந்திரகாந்த் தேசாய். ‛‛1942 ஏ லவ் ஸ்டோரி, தேவதாஸ், முன்னாபாய், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை, லகான்'' உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்கம் செய்துள்ளார். 100 படங்கள் வரை கலை இயக்கம் செய்துள்ள இவர் மும்பையை அடுத்து கர்ஜாத் என்ற இடத்திற்கு அருகே 52 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக என்டி ஸ்டுடியோஸ் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். இங்கு தான் ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்கள் உருவாகின.
கலை இயக்குனராக மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் அவர் செய்துள்ளார். கலை இயக்கத்திற்காக 4 முறை தேசிய விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று(ஆக., 2) அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நிதின் சந்திரகாந்த் தேசாய். தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.