சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
மறைந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனம் கவிதாலயா. பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம் அவரின் மறைவுக்கு பின் தயாரிப்பில் இருந்து சற்று ஒதுங்கியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இந்த படத்தை உதய் மகேஷ் இயக்குகிறார். குழந்தைகளை கவரும் கதை களத்தில் உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். நாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது 'லக்கி சூப்பர் ஸ்டார்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஜி.வி.பிரகாஷ், சரத்குமார் இணைந்து நடித்த அடங்காதே படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.