‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தமிழகத்தில் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகளை பராமரித்து வருகிறவர்கள் பொம்மன், பெல்லி. இவர்களை மையமாக வைத்து உருவான ஆவண குறும்படம் ‛எலிபன்ட் விஸ்பரர்ஸ்' என்ற பெயரில் எடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதையும் வென்றது. யானைகுட்டிகளை இந்த தம்பதியர் எப்படி அன்பாக பராமரித்து வளர்த்தனர் என்று அந்த குறும்படத்தில் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற பின் இந்த தம்பதியர் இந்தியா முழுக்க பிரபலமாகினர். பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் பாராட்டி, கவுரவித்தனர். இப்போது நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவும் அவர்களை அழைத்து பாராட்டி உள்ளார். டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த இந்த நிகழ்வில் பொம்மன், பெல்லி தம்பதியரை அழைத்து, யானைக் குட்டிகளைப் பராமரிப்பதில் தமது வாழ்நாளை அர்ப்பணித்தமைக்காக ஜனாதிபதி பாராட்டினார்.