Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்க வந்த சனுஷா

18 ஜூலை, 2023 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Sanusha-came-back-to-act

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றவர் சனுஷா. சுமார் 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். தமிழில் காசி, சுந்தரா டிராவல்ஸ், பீமா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 'ரேணிகுண்டா' படத்தில் ஹீரோயின் ஆனார். மலையாளத்தில் 'மிஸ்டர் மருமகன்' படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தவர் சமீப ஆண்டுகளாக வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தார்.

6 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் கொடிவீரன் படத்தில் நடித்தார், அதன் பிறகு தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகும் 'ஜலந்தரா பம்ப்செட் சின்ஸ் 1962' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் ஊர்வசி, டிஜி ரவி, ஜானி ஆண்டனி, அஞ்சலி சுனில் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஷிஷ் சின்னப்பா இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கைலாஸ். வொண்டர்பிரேம்ஸ் பிலிம்லேண்ட் பேனரில் இந்தப் படம் தயாராகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
6 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் அஸ்வின்6 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக ... 'கொலை' மூலம் தமிழுக்கு வரும் மீனாட்சி சவுத்ரி 'கொலை' மூலம் தமிழுக்கு வரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)