இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மீனாட்சி சவுத்ரி. பல் மருத்துவம் படித்தவர். மாடலிங் உலகில் அறிமுகமான இவர் 2018ம் ஆண்டு 'மிஸ் இந்தியா' போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் புகழ்பெற்றார். இதன் மூலம் 'இச்சட வாகனமுலு நிலுபரடு' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 'கிலாடி' படத்தில் நடித்தார். தற்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கொலை' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடிக்கும் இப்படத்தை 'விடியும் முன்' படத்தை இயக்கிய பாலாஜி கே.குமார் இயக்கியுள்ளார். வரும் 21ம் தேதி படம் வெளிவருகிறது.
கொலை படத்தில் நடித்திருப்பது பற்றி மீனாட்சி சவுத்ரி கூறியதாவது: முதலில் இந்த கேரக்டரில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமானார். திடீரென்று அவர் விலகியதால் என்னை ஒப்பந்தம் செய்தனர். நான் பல் மருத்துவம் படித்தேன். ஆனால், எந்த மருத்துமனையிலும் பணியாற்றவில்லை. மாடலிங், சினிமா என்று பிசியாகி விட்டேன். நயன்தாரா, திரிஷாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் அவர்களைப் போல் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிப்பேன். தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் இணைந்து நடிக்க விரும்புகிறேன். தற்போது தீவிரமாக தமிழ் கற்று வருகிறேன். தற்போது 'குண்டூர் காரம்' என்ற தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்து வருகிறேன். என்றார்.