கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை |
கணவன்மார்களை விவாகரத்து செய்வதும், கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வதுமாக இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் கணவனுக்கு பாதபூஜை செய்து பரபரப்பு ஏற்படுத்திருக்கிறார் நடிகை பிரணிதா. தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், உள்ளிட்ட படங்களில் நடித்தவர். ஏராளமான கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். தற்போது திலீப் ஜோடியாக மலையாள படத்தில் நடித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்னர் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை மணந்த பிரணிதா தம்பதிக்கு அர்ணா என்ற 2 வயது மகள் இருக்கிறார்.
தமிழகத்தின் ஆடி அமாவாசை போன்று கர்நாடகத்தில் பீமனா அமாவாசை அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தில் மனைவியர் தமது கணவருக்கு பாத பூஜை செய்வது ஹிந்துக்களில் ஒரு சாரார் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்த வகையில் கடந்தாண்டு பீமனா அமாவாசையன்று கணவருக்கு பாதை பூஜை செய்யும் புகைப்படத்தை நடிகை பிரணிதா பகிர்ந்திருந்தார். தற்போது இந்த வருடம் அதே தினத்தில், மீண்டும் கணவரின் பாதத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“இன்று பீமனா அமாவாசையை முன்னிட்டு பூஜை மேற்கொண்டேன். இது ஆணாதிக்க சடங்காக சிலருக்கு தெரியலாம். ஆனால் சனாதன தர்மத்தில் இது முக்கிய வழிபாடுகளில் ஒன்று. ஹிந்து வழிபாட்டில் ஆணாதிக்கம் என்பது அடிப்படை அற்றது. பெண் கடவுளையும் இணையாக வழிபடுகிறோம்” என்று தனது பதிவில் பிரணிதா தெரிவித்திருக்கிறார்.