ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மாவீரன். அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வெளியான இப்படம் ஓரளவு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பற்றி இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளதாவது: மாவீரன் அற்புதமாக எழுதப்பட்ட மடோன் அஸ்வினின் புத்திசாலித்தனம். கிளாஸ் மாஸ் என்டர்டெய்னர். திரைக்கதைக்குள் உள்ள அற்புதமான நகைச்சுவை உணர்வு ரசிக்கும்படி உள்ளது. சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பினை வழங்கியுள்ளார்.
அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். சரிதா, யோகிபாபு மற்றும் மிஷ்கின் சிறப்பாக நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நடனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்! நிச்சயமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு மகிழ்ச்சியான புதிய அனுபவம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.