நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. சுனில், ரித்து வர்மா,எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கில் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அதிருதுடா' என முதல் பாடலுக்கு தலைப்பு வைத்துள்ளனர். இந்த பாடலை டி.ராஜேந்திரன் பாடியுள்ளார். வருகின்ற ஜூலை 15ம் தேதி மாலை 6 மணிக்கு இப்பாடல் வெளியாகிறது. இதனை கலகலப்பான வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.