நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கிரிக்கெட் வீரர் தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தில் தமிழில் உருவாகி உள்ள எல்ஜிஎம் பட இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தார். படத்தின் பாடலை வெளியிட்ட அவர், ‛‛சென்னை எனக்கு பிடித்த இடம். அளவில்லா அன்பை ரசிகர்கள் கொடுத்தனர். என் வாழ்வில் பல நல்ல விஷயங்கள் இங்கு தான் நடந்தது. படம் பார்த்துவிட்டேன் நான்றாக உள்ளது. எல்லோருக்கும் பொருந்துகிற ஒரு கதை. சென்னை ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த படத்தின் மூலம் சிறிய பகுதியை திருப்பி கொடுப்பதாக நினைக்கிறேன்'' என்றார்.
தொடர்ந்து அவருடன் இந்த படத்தில் நடித்த திரைப்பிரபலங்கள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அதை ஒவ்வொருவரும் தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தோனியின் தீவிர ரசிகரான இயக்குனர் விக்னேஷ் சிவனும் அவரை சந்தித்துள்ளார். அப்போது தனது டி-சர்ட்டில் தோனி கையெழுத்திட, பதிலுக்கு விக்னேஷ் சிவன் அவர் கைகளில் முத்தமிட்டார் மகிழ்ந்தார்.
இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டு, ‛‛ என் ஹீரோ, கேப்டன், ரோல் மாடல் தோனி. அவர் அருகில் இருந்தது மகிழ்ச்சியாகவும், எமோஷனலாகவும் இருந்தது. எப்போதும் நான் வியந்து அன்னாந்து பார்க்கும் ஒரு மனிதர். அவரை எப்போது பார்த்தாலும் மகிழ்ச்சியாய் உணர்வேன். அவர் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்தது மகிழ்ச்சி. அவரது படத்துக்கு அன்பும் ஆதரவும் அளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்'' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.