நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி |
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த அருண் ராஜா காமராஜ், இன்னொரு பக்கம் பாடல் எழுதுவது, பின்னணி பாடுவது என்று கவனம் செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களையும் இயக்கினார். தற்போது அவர் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா என்ற பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்புபை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தான் அளித்த ஒரு பேட்டியில், இந்த ஜெயிலர் படத்தில் நடனம் சார்ந்த ஒரு சூழலுக்கு பாடல் எழுத வேண்டும் என்று என்னை அழைத்த இசையமைப்பாளர் அனிருத், தெலுங்கு வார்த்தைகளும் கலந்து எழுத வேண்டும் என்று கூறினார். அதனால் இந்த பாடலில் ஆங்காங்கே தெலுங்கு வார்த்தைகளையும் கலந்து அரை மணி நேரத்தில் எழுதி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. பாடல் சிறப்பாக உள்ளது, கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்னார் அனிருத். அவர் சொன்னது போலவே தற்போது காவாலா பாடல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தில் நான் எழுதிய நெருப்புடா பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு அவரது காலா படத்திலும் பாடல் எழுதினேன். இப்போது ஜெயிலர் படத்திலும் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் அருண் ராஜா காமராஜ்.