ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சமூக வலைத்தளங்களில் புதிய படங்களின் அப்டேட்கள் ஏதாவது வரும் போதுதான் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள். விஜய்யின் 'லியோ' படப் பாடலான 'நா ரெடி' பாடல் வெளிவந்து இன்றோடு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், தற்போதைக்கு எந்த ஒரு அப்டேட்டும் இல்லாத நிலையில் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் ஒரு சண்டை போய்க் கொண்டிருக்கிறது.
'கோலிவுட் கோமாளி விஜய்' #KollywoodClownVIJAY என்று அவரை கடுமையாக எதிர்த்து ஒரு டிரெண்டிங் போய்க் கொண்டிருக்கிறது. அந்த ஹேஷ்டேக்கில் மட்டுமே இதுவரையில் ஏழு லட்சத்திற்கும் அதிகமான டுவீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராக விஜய்யை ஆதரித்து, 'நிகரற்ற தளபதி விஜய்' #UnRivalledThalapathyVIJAY என அதே ஏழு லட்சத்திற்கும் அதிகமான ஆதரவு டுவீட்டுகளும் பதிவிடப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் 'சலார்' டீசர் வெளியீடு, மற்றொரு பக்கம் 'ஜெயிலர்' முதல் சிங்கிள் ரிலீஸ் என இன்று சினிமா உலகில் பரபரப்புள்ள நிலையில் விஜய், அஜித் சண்டை சமூக வலைதளங்களில் எப்போது வேண்டுமானாலும் உருவாகும் போலிருக்கிறது.