Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவின் 'காவாலா'; காத்திருக்கும் ரசிகர்கள்

06 ஜூலை, 2023 - 01:17 IST
எழுத்தின் அளவு:
Tamannaahs-Kawala;-Waiting-fans

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

அந்தப் பாடலில் தமன்னாவின் கவர்ச்சி நடனம் இருக்கலாம் என்று போஸ்டரைப் பார்த்ததும் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் தமன்னா பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஓடிடி தளங்களில் வெளியான 'ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2' ஆகியவற்றில் தமன்னா கவர்ச்சிகரமாக நடித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அவற்றின் சில வீடியோக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து கமென்ட் செய்து வந்தனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படப் பாடல் எப்படி இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினிகாந்த் உள்ளிட்ட டாப் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் கவர்ச்சிப் பாடலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் ஒரு யூகம் உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் எப்படிப்பட்ட பாடல் என்பது தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யை கடுமையாக எதிர்த்தும், ஆதரித்தும் டிரெண்டிங்விஜய்யை கடுமையாக எதிர்த்தும், ... நாக சைதன்யா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்? நாக சைதன்யா படத்திற்கு இசையமைக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)