ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான 'கேஜிஎப் 2' படத்தின் டீசர் கடந்த 2021ம் வருடம் ஜனவரி மாதம் யு டியூபில் வெளியானது. அந்த டீசர் 24 மணி நேரத்தில் 78 மில்லியன் பார்வைகளையும், 4 மில்லியன் லைக்குகளையும் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அப்போது அறிவித்தனர்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தயாரிப்பு நிறுவனம், அதே இயக்குனர் உருவாக்கத்தில் வரும் 'சலார்' படத்தின் டீசர் இன்று அதிகாலையில் வெளியாகியுள்ளது. 'கேஜிஎப்' இயக்குனரின் அடுத்த படம், பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடித்துள்ள படம் என 'சலார்' படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
'கேஜிஎப் 2' டீசரின் சாதனையை 'சலார்' டீசர் முறியடிக்குமா என பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபாஸ் நடித்து வெளியான 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் கடந்த வருடம் வெளியான போது அது 24 மணி நேரத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
'கேஜிஎப் 2' சாதனையை மட்டும் 'சலார்' முறியடிக்குமா அல்லது 'ஆதிபுருஷ்' சாதனையையும் சேர்த்தே முறியடிக்குமா என்பது நாளை காலையில் 24 மணி நேரம் முடியும் போது தெரிய வரும்.