நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
'சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு' ஆகிய படங்களை இயக்கிய எச் வினோத் அடுத்து கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன், வினோத் கூட்டணி பற்றி செய்திகள் வெளிவந்தன. ஆனால், எந்த விதமான அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. அதே சமயம் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி நீண்ட இடைவெளிக்குப் பின் இணையும் கமல்ஹாசனின் 234வது படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்தது. அதனால் கமல்ஹாசன், வினோத் கூட்டணி பற்றிய சந்தேகம் இருந்து வந்தது.
மணிரத்னம் தற்போது கதை விவாதத்தை நடத்திக் கொண்டு திரைக்கதை, வசனம் எழுதும் வேலைகளில் இருக்கிறாராம். அது முடிவதற்கே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள். அதைப் பிரம்மாண்டப் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். எனவே, அதற்கான முன்கட்ட வேலைகள் நிறைய இருக்கிறதாம். அந்த வேலைகள் முடிவதற்குள்ளாக குறுகிய கால தயாரிப்பாக கமல்ஹாசன் 233 இருக்கும் என்கிறார்கள். இதற்கான வேலைகளை வினோத் ஏற்கெனவே முடித்துவிட்டாராம்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சில வாரங்களில் ஆரம்பமாக உள்ளது. அதை நடத்திக் கொண்டே இடையிடையே 233வது படத்திலும் கமல் நடித்துவிடுவாராம். 'பிக் பாஸ், கமல்ஹாசன் 233' இரண்டும் முடிந்த பிறகு கமல்ஹாசன் 234 படத்தை ஆரம்பிக்கத் திட்டம் எனத் தகவல். இதுதவிர பிரபாஸ் உடன் ப்ராஜெக்ட் கே படத்திலும் நடிக்க போகிறார் கமல்.