ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றி தோல்விகளை கடந்து, தற்போது சரத்குமார் உடன் இணைந்து ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விதார்த் நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் பூஜை படப்பிடிப்பு உடன் துவங்கியுள்ளது.
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை சகோ கணேசன் என்பவர் இயக்குகிறார்.
விதார்த் உடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜூ அஸ்வினி, ஜான் விஜய், அதுல்யா சந்திரா, ஸ்வேதா தொரத்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜிஷ் அசோக் இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.