தமிழில் மூன்றாம் நிலை ஹீரோக்களாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருபவர்களுக்கு மலையாள திரையுலகில் நல்ல கதாபாத்திரங்கள் தேடி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற படத்தில் கதாநாயகன் டொவினோ தாமஸுக்கு இணையான கதாபாத்திரத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்தார் குரு சோமசுந்தரம்..
தற்போது அவரை தொடர்ந்து நடிகர் கலையரசனும் சார்லீஸ் என்டர்பிரைசஸ் என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். சுபாஷ் லலிதா சுப்பிரமணியம் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆச்சரியமாக இந்த படத்தில் குரு சோமசுந்தரமும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் மின்னல் முரளி இயக்குனர் பசில் ஜோசப்பும் இணைந்து நடிக்கிறார்.