அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப்போகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராக உள்ளது. இதையடுத்து விஜய்யின் 67வது படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இந்த படத்தை இதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் தான் இயக்கிய கைதி படத்தைப் போலவே நாயகி மற்றும் பாடல்கள் இல்லாத திரைக்கதையில் லோகேஷ் உருவாக்குகிறாராம். தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இந்த ஆண்டு இறுதியில் விஜய் படத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.