‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊறும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் |

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு த்ரிஷா தனது இரண்டாவது ரவுண்டை அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார். 'லியோ' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். 'தி ரோட்' என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். 'ராம்' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புரோ டாடி' என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு தந்தையாகும் கதை. அதே நேரத்தில் அவரது மகனும் தந்தை ஆகிறார். மலையாளத்தில் மோகன்லால் மகனாக பிருத்விராஜ் நடித்திருந்தார். ரீமேக்கில் நடிப்பது யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.
2006ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.




