வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

சென்னை: மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், அமைச்சர் உதயநிதி, 'ரெட் ஜெயின்ட்' நிறுவனம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, 'ஓ.எஸ்.டி., பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனு: உதயநிதியை கதாநாயகனாக வைத்து, ஏஞ்சல் என்ற படத்துக்கான தயாரிப்பு பணிகள், 2018 ஜூலையில் துவங்கின. 70 நாட்கள் 'கால்ஷீட்' தருவதாக, உதயநிதி ஒப்புக் கொண்டார். தற்போது, 80 சதவீத படப்படிப்பு முடிந்துள்ளது. 13 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. மீதி பணிகளை முடிக்க, எட்டு நாட்கள் போதும். அதற்கான கால்ஷீட் உதயநிதி தரவில்லை. அமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட்ட பின், மாமன்னன் படம் தான், தன் கடைசி படம் என கூறியுள்ளார். 'மாமன்னன்' படமும் வெளியாக போகிறது. ஏஞ்சல் படத்துக்கான பணிகளை முடித்து தர, உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடு தரவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, நீதிபதி குமரேஷ்பாபு முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜரானார். ரெட் ஜெயின்ட் மூவிஸ் தரப்பில், பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வரும் 28க்குள் பதில் அளிக்க, உதயநிதி மற்றும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்தார்.




