பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு நடித்த படம் 'மாமன்னன்'. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரையுலகில் இருந்து விலகும் உதயநிதிக்கு முக்கியமான படமாகவும் அமைந்தது.
இந்த படத்தை 'நாயகடு' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். சுரேஷ் புரொடக்ஷன் மற்றும் ஏசியன் மல்டிபிளக்ஸ் இணைந்து தெலுங்கு பதிப்பை வெளியிட்டது.
'நாயகடு'வெளியான தேதியில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'பேபி' படம் வெளியானது. அதோடு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் 'மாவீரடு' என்ற பெயரில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் 'மாமன்னன்' படத்தை தெலுங்கு ரசிகர்கள் கவனிக்கவில்லை. அதோடு வருகிற 27ம் தேதி படம் ஓடிடியில் வெளியாவதால் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர். இதுபோன்ற குழப்பத்தால் மாமன்னன் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.