மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் குணசித்ரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் ரஞ்சனா நாச்சியார். துப்பறிவாளன், இரும்புத்திரை, அண்ணாத்த, டைரி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். என்ஜீனியரான இவர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் நுழைந்து நடித்து வருகிறார்.
ரஞ்சனா தற்போது தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். குரு பிலிம் புரொடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள ரஞ்சனா ஒரே சமயத்தில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தை பில்லா பாண்டி, குலசாமி, கிளாஸ்மேட்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரவண சக்தி இயக்குகிறார். இன்னொரு படத்தை டிவி நடிகரான சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுமே கிராமத்து கதைக்களத்தில் உருவாக இருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது, “மிகப்பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தபோதும்கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன். அதன் முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுபற்றிய நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.
பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர்தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள், ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன். இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என்கிறார்.