5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? |
ஹாலிவுட் படங்கள் எப்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக ஆரம்பித்ததோ அப்போது முதல் அப்படங்கள் நேரடி தமிழ்ப் படங்களுக்கும் போட்டியாக வர ஆரம்பித்துவிட்டது. சில முக்கியமான ஹாலிவுட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதைப் பயன்படுத்தி அவர்களும் அதிகமான தியேட்டர்களைப் பெற்று படங்களை வெளியிடுகிறார்கள்.
நாளை ஜுன் 9ம் தேதி தமிழில் 'போர் தொழில், டக்கர், பெல்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அவற்றோடு தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள 'விமானம்', ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள 'டிரான்ஸ்பார்மர்ஸ் - ரைஸ் ஆப் த பீஸ்ட்ஸ்' படங்களும் வெளியாகின்றன.
நாளை வெளியாக உள்ள படங்களில் 'டிரான்ஸ்பார்மர்ஸ்' படத்திற்கு இளம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. மற்ற நேரடிப் படங்களை விடவும் இப்படத்திற்கு அதிகத் தியேட்டர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் 2டி, 3டி, ஐமாக்ஸ் 3டி ஆகிய தொழில்நுட்பங்களில் வெளியாகிறது.
2007ல் முதன் முதலாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' படம் வெளியானது. அதன் பிறகு அதன் தொடர்ச்சியாக 2009ல் 'டிரான்ஸ்பார்மர்ஸ் - ரிவஞ்ச் ஆப் த பால்லன்', 2011ல் 'டிரான்ஸ்பார்மர்ஸ் - டார்க் ஆப் த மூன்', 2014ல் 'டிரான்ஸ்பார்மர்ஸ் - ஏஜ் ஆப் எக்ஸ்டின்க்ஷன்', 2017ல் 'டிரான்ஸ்பார்மர்ஸ் - த லாஸ்ட் நைட்' ஆகிய படங்களும் அதன் முன் தொடர் படமாக '2018'ல் 'பம்ப்லிபீ' வெளியானது. அடுத்த முன் தொடர் படமாக நாளை வெளியாக உள்ள 'டிரான்ஸ்பார்மர்ஸ் - ரைஸ் ஆப் த பீஸ்ட்ஸ்' வெளியாக உள்ளது. இதற்கடுத்து 2023ல் 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' படமும் முன் தொடர் படமாக வெளியாக இருக்கிறது.