ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவரது மகன் லியோ சிவகுமார். ஏற்கனவே மனிதன், கண்ணை நம்பாதே படங்களில் சிறிய வேடத்தில் நடித்தார். தற்போது 'அழகிய கண்ணே' என்ற படத்தின் மூலம் நாயகன் ஆகியிருக்கிறார். இந்த படத்தை சீனு ராமசாமியின் தம்பி ஆர்.விஜயகுமார் இயக்குகிறார். சிவகுமார் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபுசாலமன், சிங்கம்புலி, ராஜ்கபூர், ஆதவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் நடித்திருப்பது பற்றி லியோ சிவகுமார் கூறியதாவது: சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிப்பதுதான் என் கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. சீனு ராமசாமி என்னை 'மனிதன்' படத்தில் நடிக்க வைத்தார். உதயநிதி 'கண்ணை நம்பாதே' படத்தில் நடிக்க வைத்தார். இப்போது இந்த படத்தின் மூலம் ஹீரோவாகி இருக்கிறேன்.
இந்த படத்தில் நான் சினிமா வாய்ப்பு தேடும் உதவி இயக்குனர் வேடத்தில் நடிக்கிறேன். என்னை ஒரு பெண் காதலித்து எனது கனவு நிறைவேறும் வரை உடன் வருவார். எங்களுக்கு குழந்தையும் இருக்கும். இப்படியான கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் தயங்கினார்கள். ஆனால் சஞ்சிதா ஷெட்டி கதையை மட்டும் கேட்டுவிட்டு உடன் நடிப்பது யார்? தயாரிப்பாளர் யார்? என்றெல்லாம் யோசிக்காமல் நடித்தார். என்னை விட சீனியர் நடிகை என்றாலும் என்னோடு இணைந்து எளிமையாக நடித்தார். நடிப்பு தொடர்பான பல விஷயங்களை எனக்கு சொல்லியும் கொடுத்தார் என்றார்.