டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவருமே கடந்த சில வருடங்களாகவே நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார்கள் என்பாத்து தெரிந்தது தான். அதேசமயம் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக அறிவிக்கவும் தங்களை காதலர்களாக வெளிப்படுத்திக் கொள்ளவும் தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதும் பல இடங்களில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக இவர்கள் வெளியூரில் ஹோட்டல் மற்றும் ஸ்பா ஆகிய இடங்களுக்கு காரில் வந்து இறங்குவது போன்ற வீடியோக்களும் தங்கள் முகத்தை மறைத்தபடி, கேமராக்களை தவிர்த்து விட்டு வேக வேகமாக செல்லும் வீடியோக்களும் கூட வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு சித்தார்த்தும் அதிதி ராவும் ஜோடியாகவே வந்துள்ளனர். முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது லக்கேஜ்களை ட்ராலியில் தள்ளிக்கொண்டு யாரையும் கவனிக்காமல் சித்தார்த் வேகமாக செல்ல, அவருக்கு சில அடிகள் தூரத்தில் பின்னால் வந்த அதிதி ராவ் தன்னை புகைப்படம் எடுத்த பலருக்கும் நின்று நிதானமாக போஸ் கொடுத்தார்.
அவரிடம் சித்தார்த்துடன் சேர்ந்து நில்லுங்கள் என கேட்டதற்கு நாகரீகமாக மறுத்துவிட்டு படம் எடுத்தவர்களுக்கு பை சொல்லியபடி கவுண்டரில் நின்றிருந்த சித்தார்த்துடன் இணைந்து கொண்டதுடன் தனது கைப்பையையும் சித்தார்த்தின் லக்கேஜ் ட்ராலியில் வைத்தபடி விமான நிலையத்திற்குள் சென்றார் அதிதி ராவ். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது விரைவில் இவர்கள் தங்களது காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என உறுதியாக எதிர்பார்க்கலாம்.




