இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
2020ம் ஆண்டு முதல் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா நோயால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதில் திரையுலகமும் பெரும் சிக்கல்களை சந்தித்தது. சில மாதங்கள் தியேட்டர்கள் மூடல், அதன்பின் 50 சதவீத அனுமதி என வந்தது. பின்னர் இரண்டாவது அலையின் போதும் 50 சதவீத அனுமதி அமலுக்கு வந்தது. இதனால், கடந்த மூன்று வருடங்களாகவே பல படங்களின் வெளியீடுகள் தாறுமாறாக தள்ளிப் போனது.
அப்படி தள்ளிப் போன படங்களில் 'பொம்மை' படமும் ஒன்று. 'மொழி, அபியும் நானும், பயணம், காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ள படம் 'பொம்மை'. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க, எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரைலர் கடந்த வருடம் ஜுன் 1ம் தேதி வெளியானது. அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்து இன்று அதே ஜுன் 1ம் தேதி பட வெளியீடு பற்றி அறிவித்துள்ளார்கள். ஜுன் 16ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.