வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'பொம்மை' படம் நாளை மறுநாள் ஜுன் 16ம் தேதி வெளியாக உள்ளது. ஒரு பொம்மை மீது வெறி கொண்ட காதலுடன் இருக்கும் ஒரு கதாநாயகனைப் பற்றிய கதை இது என்பது டிரைலரைப் பார்த்ததும் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்படத்தின் கதை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஹரிசங்கர் என்பவர் அவர் எழுதிய 'உடல்' என்ற கதையின் காப்பியாக 'பொம்மை' இருக்கலாம் என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
“திரைப்பட இயக்குநர் ராதாமோகன் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவரது மொழி திரைப்படம் பிடிக்காதவர்கள் இல்லை எனலாம்.
இன்று காலையிலிருந்து சில நண்பர்கள் எனக்கு இயக்குநர் ராதாமோகன் இயக்கிய பொம்மை திரைப்படத்தின் முன்னோடத்தை அனுப்பி, என்னுடைய உடல் தொகுப்பின் தலைப்புக் கதையான 'உடல்' கதையை அப்படியே நினைவூட்டுவதாக தகவல் சொன்னார்கள். பிறகு முன்னோட்டத்தைப் பார்த்த எனக்கும் அதன்பின் நான் அனுப்பி பார்க்க சொன்ன (ஏற்கனவே உடல் கதையை படித்த) நண்பர்களுக்கும் அவ்வாறே இருந்ததாக சொன்னார்கள். எனக்கு இவ்வாறு நடப்பது மூன்றாவது முறை. இதற்கு முன் நடந்தபோது இதே முகநூலில் எழுதினேன். ஒருவர் கூட ஆதரவளிக்கவில்லை. இப்போதும் அவ்வாறே நிகழும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
அவர்கள் இதை ஒத்த சிந்தனை, இன்ஸ்பிரேஷன் என்று மறுக்கலாம். ஒருவேளை அப்படி இல்லாமல் அவர்கள் கதையை திருடியிருந்தார்கள் என்றால் அவர்களுக்கு என் வன்மையாக கண்டனங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, 1987ம் ஆண்டு வெளிவந்த 'மனிகுயின்' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பியாகவும் இப்படம் இருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அப்படத்தின் டிரைலரும் யு டியூப் தளத்தில் உள்ளது. தமிழ் சினிமாவில் அடிக்கடி இது போன்ற கதை சர்ச்சைகள் எழுந்து வருவது குறிப்பிட வேண்டிய ஒன்று.
'மனிகுயின்' டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch?v=gDoRcg42lQI