பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா தற்போது மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பழநி அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சுசீந்திரன்.
அதில் அவர் கூறுகையில், ''பழநி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மார்கழி திங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மிகப்பெரிய கேமராவை வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று புயல் காற்று வீசி கனமழை பெய்தது. அப்போது பெரிய பெரிய லைட்டுகள் எல்லாம் கீழே விழுந்தன. ஒரு லைட்டின் மீது இடி தாக்கியது. அப்போது அதன் அருகில் நின்று கொண்டிருந்த லைட்மேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்'' என்று அந்த விபத்து குறித்த ஒரு தகவலை வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் சுசீந்திரன்.