டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வயது முதிர்ந்த பின் தந்தையாகும் நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஹாலிவுட் நடிகர்கள் பலர் இதுபோன்று வயதான பின் குழந்தை பெற்ற நிகழ்வு நடந்துள்ளது. சமீபத்தில் கூட ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நைரோ தனது 79வது வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையானார். இவரைப்போன்று இவரது நண்பரும், சக ஹாலிவுட் நடிகருமான அல் பசினோ, 83 வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாக போகிறார்.
காட்பாதர், காட்பாதர் 2, காட்பாதர் 3, ஸ்கேர்பேஸ், டிக் டிரேஸி, ஹீட், தி டெவில்ஸ் அட்வகேட், தி இன்ஸைடர், ஜாக் அண்ட் ஜில், ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இவருக்கு இரண்டு மனைவிகள் மூலம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2020 முதல் 29 வயதான குறும்பட தயாரிப்பாளர் நூர் அல்பல்லாவை காதலித்து வந்தார். இருவருக்கும் 54 வயது வித்தியாசம் உள்ள நிலையில் இருவரும் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது நூர் அல்பல்லா 8 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். விரைவில் இவருக்கு குழந்தை பிறக்க உள்ளது.
83 வயதில் தந்தையாக உள்ள அல் பசினோவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




