ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

ராக்கி, சாணி காகிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சி.ஜ.ஜ தக்ஷன் விழாவில் இப்படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் கலந்து கொண்டார் அப்போது அவர் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பேசியது : "நாங்கள் இந்த படத்தை விடுமுறை நாட்களை குறிவைத்து வெளியிட முடிவு செய்துள்ளோம். அதன்படி, அக்டோபர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறினார்".
இதனால், நடிகர் விஜய்யின் லியோ படத்துடன் தனுஷின் கேப்டன் மில்லர் மோதுமா என்று ரசிகர்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.




