ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரான்ஸ் நாட்டின் கேன்சில் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடந்து வருகிறது. உலகில் உள்ள சினிமா நட்சத்திரங்கள் ஒன்றாக கூடும் மிகப்பெரிய விழா இது. இந்த விழாவில் இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப், ஐஸ்வர்யா ராய், சாரா அலி கான், அதிதி ராவ் ஹைதாரி, சன்னி லியோன், ஊர்வசி ரவுடேலா, மிருணாள் தாக்கூர், விக்னேஷ் சிவன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த மே 16-ம் தேதி தொடங்கிய இந்த விழா இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் ஷங்கரின் உதவியாளராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களில் மூலம் பிரபலமான அட்லி தனது மனைவி பிரியாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். இருவரும் ஜோடியாக கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யார நடைபோட்ட படங்கள், வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
அட்லி தற்போது ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




