ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்கள் ஜூலை மற்றும் அக்டோபர்(தீபாவளி) மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்சனில் கமல் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்றது.
பின்னர் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அங்கே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் முற்றிலும் மாறுபட்ட இதுவரை பார்த்திராத தோற்றத்தில் வலம் வருகிறார். சமீபத்தில் ரசிகை ஒருவருடன் இந்த தோற்றத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.