அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
உலக அழகி ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டில் அதிகம் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தமிழில் மட்டும் முக்கியமான படங்களில், குறிப்பாக தனது குருநாதர் மணிரத்னம் இயக்குகின்ற படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கால்ஷீட் கொடுத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார் என்றும் மலையாள நடிகர் திலீப் நடிக்க உள்ள அவரது 148 வது படத்தில் தான் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பிரபல போட்டோகிராபர் ஷாலு என்பவர் தெரியப்படுத்தி உள்ளதுடன், திலீப் 148 வது படத்திற்கான கிளாப் போர்டை வைத்து ஒரு பெண்மணி தனது முகத்தை மறைத்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு, சிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.