ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தெலுங்குத் திரையுலகத்தின் 'என்றும் மார்க்கண்டேயன்' என்றழைக்கப்படுபவர் நாகார்ஜுனா. எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். இருந்தாலும் அவரால் தற்போது பெரிய வெற்றிகளைக் கொடுக்க முடியவில்லை. அவரது காலத்து ஹீரோக்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா கூட இப்போதும் 100 கோடி படங்களைக் கொடுத்து வருகிறார்கள்.
நாகார்ஜுனா நடித்து கடைசியாக கடந்த வருடம் வெளிவந்த 'த கோஸ்ட்' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது இளைய மகன் அகில் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 28ம் தேதி வெளிவந்த 'ஏஜன்ட்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கடுத்து அவரது மூத்த மகன் நாக சைதன்யா நடித்து தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'கஸ்டடி' படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்து அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது.
கதைத் தேர்வுகளில் அவர்கள் சரிவர கவனம் செலுத்தவில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடும் போட்டி நிலவி வரும் இந்தக் காலத்தில் கதையும், கதாபாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்களது கடைசி படங்களின் தோல்வி அவர்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, தங்களது அடுத்த படக் கதைத் தேர்வுகளில் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்பது உறுதி. சினிமாவில் வெற்றியும், தோல்வியும் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால், தோல்வியிலிருந்து மீள்வதுதான் முக்கியம்.