பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விஜய் - வெங்கட் பிரபு - யுவன்ஷங்கர் ராஜா இணையும் விஜய்யின் 68வது படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஒரு பக்கம் அது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'லியோ' பட ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படமும், கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படமும் பெரும் வசூலைக் குவித்தன. 'விக்ரம்' படத்தை விடவும் 'லியோ' படம் அதிக வசூலைக் குவித்து சாதனை புரியும் என அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
பொதுவாக விஜய் ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகுதான் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும். ஆனால், விஜய் 68 படம் பற்றிய அறிவிப்பு அதற்குள்ளாகவே வெளியாகிவிட்டது. இதனால், தேவையற்ற ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 'லியோ' ரசிகர்கள் கருதுகிறார்கள். அது பற்றிய தங்களது கமெண்ட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
'லியோ' வரும் வரை 'விஜய் 68' குழு அமைதி காப்பதே சிறப்பு. 'லியோ' படம் வெளிவந்த பின் விஜய் 68 படம் பற்றிய அப்டேட்டுகள் வந்தால்தான் எந்த குழப்பமும் இருக்காது இருக்கும் என அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. எனவே, விஜய் 68 குழு அறிவிப்போடு, கொஞ்சம் அமைதியாக இருந்து 'லியோ' படப்பிடிப்பு முடிவடையும் சமயத்தில் அடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிடலாம்.