Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அபுதாபியில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

21 மே, 2023 - 04:21 IST
எழுத்தின் அளவு:
Lifetime-Achievement-Award-for-Kamal-Haasan-in-Abu-Dhabi

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இப்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். அதோடு தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவில் பல அறிய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். மேலும் மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன் போன்ற படங்களுக்கு தேசிய விருது பெற்ற கமலஹாசன், தேவர் மகன் படத்தில் நடித்து மாநில மொழி படத்துக்கான தேசிய விருது வென்றார். அதோடு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு மே 27ம் தேதி அபுதாபியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மேலும், விக்ரம் படத்தை அடுத்து தற்போது இந்தியன்-2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன், அடுத்து மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் பொன்னியின் செல்வன்-2 வசூலை முறியடித்த பிச்சைக்காரன்-2!தெலுங்கில் பொன்னியின் செல்வன்-2 ... எஸ்.பி.பி., சித்ரா பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்  காலமானார் எஸ்.பி.பி., சித்ரா பாடல்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)