டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ‛ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம்' போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் சில. 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.
சமீபத்தில் 90வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவருக்கு, வரும் 21ம் தேதி காமராஜர் அரங்கில் நடைபெற இருக்கும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். நடிகர் பொதுக்குழுவில் எம் என் ராஜம் விருது பெற்ற பின் பேசுகிறார். பொதுக்குழுவில் தேர்தல், சங்க கட்டடம் குறித்து பேசப்பட உள்ளது.