ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற படங்களை இயக்கியவர் நந்தா பெரியசாமி. அடுத்து ஒரு பரபரப்பான திரில்லர் கதையுடன் கூடிய படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சமுத்திரகனி நடிக்க, முக்கிய வேடங்களில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.
மனிதநேய உணர்வுகளின் கலவையோடு காட்சிக்கு காட்சி பதட்டமாக ஒரு பரபரப்பான திரில்லர் படமாக இத்திரைப்படம் உருவாகிறது. கேரள எல்லையில் மேகமலை, குமுளி, மூணாறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் நடைபெறவுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.