'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி சினிமா ஆகிறது. தங்கள் கிராமத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்குவதால் பல ஆண்டுகள் தீபாவளிக்கு பட்டாசு கொழுத்தாத கிராமத்தை போன்று தங்கள் ஊர் மின்சார கம்பத்தில் ஒரு அபூர்வ வெளிநாட்டு பறவை கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்க முயற்சித்தபோது அந்த பறவை குஞ்சு பொறித்து தன் குஞ்சுகளுடன் அது பறந்து செல்லும் வரை மின்சாரத்தை பயன்படுத்தாமல் காத்திருந்த கிராம மக்க்கள் பற்றிய செய்தியும் வந்தது. இந்த செய்தியை 'கூடு' என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாக்குகிறார்கள்.
இந்த படத்தை ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிர்நேசத்தை சொல்லும் இந்த படம் காமெடி, செண்டிமென்ட் கலந்த கிராமத்து படமாக தயாராக இருக்கிறது.