Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தி கேரளா ஸ்டோரி படத்தை பார்த்துவிட்டு விமர்சியுங்கள்: அதா சர்மா வேண்டுகோள்

07 மே, 2023 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Adah-Sharma-responds-to-people-still-calling-The-Kerala-Story-a-'propaganda-film'

ஹிந்தியில் அறிமுகமாகி தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறவர் அதா சர்மா. தமிழில் ‛இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2' படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படமான ‛செல்பி' சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் அதா சர்மா நடித்துள்ள ஒரு படம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. அது ‛தி கேரளா ஸ்டோரி'.

‛‛கேரளா ஸ்டோரி படத்தில் நடிப்பதற்கு முன்பு இயக்குனரின் ஏற்பாட்டின் பேரில் கதையில் குறிப்பிடப்படும் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் அனுபவித்த கொடுமைகளை கேட்டறிந்தேன். அழகான குடும்பங்களில் இருந்து அவர்கள் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையை கேட்டு கலங்கினேன்.

படம் பற்றி வரும் புகார்களையும், விமர்சனங்களையும் நான் அறிவேன். 2 நிமிட டிரைலரை பார்த்து விட்டு எந்த முடிவுக்கும் வரவேண்டாம். இரண்டு மணி நேர படத்தை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். இந்த படத்தில் நடித்தற்காக கேரளாவை சேர்ந்த பெண்கள்கூட எனக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த படம் அரசியல் பேசவில்லை. மதவாதம் பேசவில்லை. பயங்கரவாத்தையும், மனிதநேயத்தையும் பேசுகிறது. கருத்து சுதந்திரம் உள்ள நாட்டில் விமர்சனங்களை வரவேற்போம்''. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பில் இறந்த லைட்மேன் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: தயாரிப்பாளர் வழங்கினார்படப்பிடிப்பில் இறந்த லைட்மேன் ... திரிஷாவுக்கும் மகனுக்கும் ஒரே நாள் ; மகிழ்ச்சியில் பொங்கிய மியா ஜார்ஜ் திரிஷாவுக்கும் மகனுக்கும் ஒரே நாள் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)