விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
மலையாளத்தில் உருவான 'தி கேரள ஸ்டோரி' என்கிற படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பாவி இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி வெளிநாட்டில் உள்ள ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கும் கும்பலை பற்றிய ஒரு கதையாக உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. அதனால் இந்த படத்தை திரையிடுவதற்கு கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பல இடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த படம் திரையிடப்பட்டது. அதே சமயம் பல மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் ஏப்., 5ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் வெளியான போது கேரளாவில் இதை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பிரதான கட்சிகளும் சில அமைப்புகளும் இந்த அறிவிப்புக்கு பலத்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தேர்தல் நேரத்தில் இப்படி இந்த படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது விதிகளை மீறிய செயல் என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு அரசு நிறுவனமான தூர்தர்ஷன் பாஜக என்கிற கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினர். ஆனாலும் இந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நேற்று (ஏப்., 5) தூர்தர்ஷனில் இந்தப்படம் ஒளிபரப்பானது.