இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
சமீபத்தில் நடிகை திரிஷா தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதில் கிட்டத்தட்ட 23 வருடங்கள் திரையுலகில் தனது ஆதிக்கத்தையும் செலுத்தி, தற்போதும் கதாநாயகியாகவே நடித்து வருகிறார். திரிஷா இவரின் பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் மலையாள நடிகை மியா ஜார்ஜ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை திரிஷாவுக்கு தெரிவித்துள்ளதுடன் அவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு ஒரு ஆச்சரியமான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த பிறந்தநாள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒரு நாள். காரணம் உங்களது பிறந்த நாள் தான் என் மகனுக்கும் பிறந்தநாள். அதனால் உங்கள் இருவருக்கும் ஒன்றாகவே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் பணியாற்றியது மிக அற்புதமான அனுபவம். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நீண்ட நாட்கள் நினைவில் வைத்து பாதுகாக்கும் விதமாக உங்களுடனான பல நினைவுகளையும் சேமித்து வைத்துள்ளேன்” என்று மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.
திரிஷா நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வரும் 'தி ரோடு' என்கிற படத்தில் திரிஷாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மியா ஜார்ஜ் நடித்துள்ளார். அப்போது தனது குடும்பத்துடன் திரிஷாவை சந்தித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் மியா ஜார்ஜ்.